ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் சாவு! போலீசார் விசாரணை!

Photo of author

By Parthipan K

ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் சாவு! போலீசார் விசாரணை!

Parthipan K

Young girl dies in Erode district! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் சாவு! போலீசார் விசாரணை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திங்களூர் நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (31). இவர் கடந்த வாரம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். அப்போது அவர் தற்கொலை செய்து கொள்வதை கண்ட   அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர்   உடனடியாக சிவகாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு  அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிவகாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சிவகாமி உயிரிழந்தார்.  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிவகாமியின் தாயார் கண்ணம்மாள் திங்களூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில்திங்களூர்  போலீசார்  சிவகாமியின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.