ஒருதலைக் காதல் விவகாரத்தில் நர்சிங் மாணவி கழுத்தறுத்து படுகொலை! சிக்கிய கஞ்சா வாலிபர்

ஒருதலைக் காதல் விவகாரத்தில் நர்சிங் மாணவி கழுத்தறுத்து படுகொலை! சிக்கிய கஞ்சா வாலிபர்

 

ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றால் போல இப்பொழுதெல்லாம் ஒரு தலை காதலுக்கு பஞ்சம் இருக்காது என்பதை உண்மையாக்கும் விதமாக பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

 

காதல் என்பது அணைவருக்கும் பொதுவானது தான், அந்த காதலுக்கு கண் இல்லை என்பது போல சில சமயங்களில் ஏன் பல நேரங்களில் உண்மையாகி, கொடுரமான சம்பவங்களையும் அரங்கேற்றிவிடுகின்றன. அது போல ஒரு சம்பவம் தான் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டத்தில் மிக முக்கியமான பகுதியான விக்கிரவாண்டி ராதாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் தான் 19வயதான தரணி. இவர் அங்குள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் உயர் பட்டப்படிப்பு பயின்று வரும் நிலையில், அணைவருக்கும் இந்த வயதில் காதல் மலருவது போல இவருக்கும், காதல் மலர் மலர்ந்துள்ளது.

 

தரணியின் காதல் மலரை மலர வைத்த ஆண் பொன்வண்டு தான் 25வயதான கணேஷ். காதலுக்கு அணியானது போல கணேஷ் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளார். இதனை விரும்பாத பெண் பொன்வன்டான தரணி கொஞ்சம் கொஞ்சமாக கணேஷை விட்டு விலகியுள்ளார்.

 

தரணியின் விலகலை பொறுத்து கொள்ள முடியாத கணேஷ், அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு தன்னை விட்டு விலக வேண்டாம் என கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார் கணேஷ்.

 

இந்நிலையில் தான் சம்பவத்தன்று தரணி எப்போதும் போல தங்களுடைய தோட்டத்தில் தனிமையில் இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கணேஷ் அங்கே ஒளிந்திருந்து தரணி நடவடிக்கைகளை நோட்டமிட்டு, திடிரென தரணி வெளிவந்த போது தான் மறைத்து வைத்திருந்த மர்மமான ஆயுதத்தால் தரணியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பியோடினார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்த உயிரிழந்தார் தரணி.

 

அறுபட்டு இறந்து கிடந்த தரணியை பார்த்து துடிதுடித்து கதறிய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடனே இது குறித்து விக்கிரவாண்டி போலிசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அங்கு சென்ற போலீசார் தரணியின் உடலை விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்,

 

இதனிடையே தப்பியோடிய கஞ்சாவிற்கு அடிமையான கணேஷை விக்கிரவாண்டி போலிசார் சம்பவம் நடைபெற்ற இரண்டே மணி நேரத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விக்கிரவாண்டி போலிசார் தெரிவித்தனர்.

 

ஒருதலை காதலால் நர்சிங் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் விக்கிரவாண்டி ராதாபுரம் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.