தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட பட்டதாரி இளைஞர் கைது

Photo of author

By Anand

தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட பட்டதாரி இளைஞர் கைது

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட பட்டதாரி இளைஞரை மத்திய சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் அரவிந்த்.

அரவிந்த் 39 வயதாகும் பட்டதாரி இளைஞர். இவர் சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், தமிழக அரசு குறித்தும் அவதூறு கருத்துகளை பரப்பி வந்துள்ளார்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து விசாரிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதன்பேரில், மத்திய சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து, அரவிந்த்தை கைது செய்தனர். அவரிடம் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.