இளைஞர்களுக்கு  அதிகரிக்கும் போதை மேல் உள்ள மோகம்! தேனியில் வரவேற்கப்படும் விழிப்புணர்வு!

Photo of author

By Rupa

இளைஞர்களுக்கு  அதிகரிக்கும் போதை மேல் உள்ள மோகம்! தேனியில் வரவேற்கப்படும் விழிப்புணர்வு!

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேரி மாதா கல்லூரியில் போதை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஸ் அவர்கள் உத்தரவின் பெயரில் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் மேரி மாதா கல்லூரி முதல்வர் முன்னிலையில் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் முன்மொழிந்திட கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு நடந்தது.

இதில் பேசிய பெரியகுளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளருமான  முத்துக்குமார் மற்றும் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் இருவரும் கல்லூரி மாணவர்களுக்கு போதை என்னும் கொடிய விஷம் உள்ள கஞ்சா, மது, புகைப்படிக்கம் போன்றவை மாணவர்களிடம்  அறவே இருக்க வேண்டாம் அவை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவே மாணவர்கள் நல்ல முறையில் கற்று பெற்றோர்களுக்கு  பயின்ற கல்லூரிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாணவர்களுக்கு புரியும்படி எடுத்துரைத்ததார்.

அவர் உரைக்கு மாணவர்களிடையே கரவொலி எழுப்பப்பட்டது. இதனால் காவல்துறையினர் ஏற்பாடு செய்யப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.உடன் கல்லூரி பேராசிரியர்கள்  மற்றும் சக காவலர்கள் உடன் இருந்தனர்.