புற்றுநோய் பாதிப்பில் இளைஞர்கள் தான் நம்பர் 1!! வெளியான ஆய்வறிக்கையின் அதிர்ச்சி தகவல்!!
சமீபகாலமாக புற்றுநோயின் தாக்கமானது சற்று அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. சிறுவர் மற்றும் சிறுமியர் என தொடங்கி பெரியவர்கள் வரை அவர்களது உடலில் எந்த ஒரு அறிகுறியும் இன்றி ஊடுருவி விடுகிறது. பல நாட்கள் கழித்து தான் இதன் வெளிப்பாடு தெரிய வருகிறது. அந்த வகையில் இந்தப் புற்று நோய்க்கு அதிகளவு இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது.
அதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் புற்றுநோயால் கிட்டத்தட்ட எட்டு சதவீதத்திற்கும் மேல் 14 வயதுடைய சிறுவர் மற்றும் சிறுமியர் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இது பொதுமக்கள் மத்தியில் பெருமளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புற்று நோய்க்கு குறிப்பாக போதை சார்ந்த பொருட்களை உபயோகப்படுத்துபவர்கள் தான் அதிகளவு பாதிப்பை சந்திக்கின்றனர்.
தற்பொழுது புற்றுநோய் இல்லாத பாரதம் அறக்கட்டளையானது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். அதனடிப்படையில் கிட்டத்தட்ட 60% ஆண்கள் புற்றுநோய் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக 15 சதவீதம் பேருக்கு மார்பக புற்றுநோயும், ஒன்பது சதவீதம் பேருக்கு பிளட் கேன்சர் இருப்பதாக கூறுகின்றனர்.
மேற்கொண்டு இந்தியாவில் மட்டும் மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் மக்கள் தான் புற்று நோய்க்கு அதிகளவு பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். யாரேனும் புற்றுநோய் மற்றும் அதன் தொடர்பான சிகிச்சை குறித்து சந்தேகம் இருந்தால் 93555 20202 தங்களை தொடர்பு கொள்ளுமாறு இணைப்பு எண்ணையும் கொடுத்துள்ளனர். இது குறித்து சந்தேகம் இருக்கும் நபர்கள் காலை பத்து மணி முதல் மாலை 5 மணி வரை இவர்களை தொடர்பு கொள்ளலாம்.