விடியா அரசே விலையில்லா லேப்டாப் என்னாச்சு.. இந்த வருடமும் நொண்டிச்சாக்குதானா ?? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!   

0
193
Edappadi Palaniswami condemned for not providing free laptop
Edappadi Palaniswami condemned for not providing free laptop

விடியா அரசே விலையில்லா லேப்டாப் என்னாச்சு.. இந்த வருடமும் நொண்டிச்சாக்குதானா ?? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுகவின் பல நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது. அதில் இந்த மாணவர்களுக்கு வழங்கி வந்த விலையில்லா மடிக்கணினி திட்டத்தையும் முடக்கியது. வருடம் தோறும் விலையில்லா மடிக்கணினியைப் பெற மாணவர்கள் பெருமளவு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த திமுக-வானது மாணவர்களுக்கு மிதிவண்டியையே தாமதமாக தான் வழங்குகிறது.

அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த மடிக்கணினி என்ற பேச்சையே எடுப்பதில்லை. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பலர் கேள்வி எழுப்பியும் சப்பை கட்டும் பதிலை தான் கூறி வருகின்றனர். தற்பொழுது பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டதுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து பதிவு ஒன்றே போட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில், அம்மாவின் அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது . இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் விடியா திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. திரு.

https://x.com/EPSTamilNadu/status/1794650559401914750

அவர்களே- லேப்டாப் வழங்கவேண்டும் என்ற அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது உங்கள் விடியா திமுக அரசு நிறைவேற்ற முன்வருமா? அல்லது, அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில் இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா?