போதையில் நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்!

போதையில் நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்!

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சத்தமாம்பட்டு கிராமத்தில்,பஞ்சன் என்னும் நபர் வசித்து வந்தார்.இவர் கடந்த 18 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

ஆனால் மீண்டும் இவர் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், நண்பர்கள் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் சத்தமாம்பட்டு பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பஞ்சன் தூக்கில் சடலமாக தொங்கியது உறவினர்களுக்கு தெரிய வந்தது.இதனைதொடர்ந்து,
உறவினர்கள் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலின் பெயரில் அவ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துவிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் பஞ்சன் காணாமல் போன தினத்தன்று,பஞ்சனை அவரது நண்பர் சசிகுமார் தான் அழைத்து சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.அவரிடம் விசாரணை நடத்துவதற்காக காவல்துறையினர் சசிகுமாரை தேடியபோது சசிகுமார் தலைமறைவானது காவல்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதனால் சசிகுமாரை தேடுதல் பணியில் தீவிரம் அடைந்தது.
குறிஞ்சிப்பாடி அருகே பதுங்கியிருந்த சசிகுமாரையும்,உடனிருந்த நந்தகோபால் மற்றும் ஜெய்பிரகாஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பஞ்சன் மற்றும் இம்மூன்று நபர்களும்,ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது.
வழக்கம்போல் 18ஆம் தேதியன்று அது அருந்தி கொண்டிருக்கும் பொழுது,
இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக பஞ்சனை மூன்று பேரும் தாக்கியுள்ளனர்.
எதிர்பாராவிதமாக பஞ்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினரிடம் மாட்டிவிடக்கூடாது என்று நினைத்த மூன்று நபர்களும் பஞ்சன் தற்கொலை செய்து கொண்டது போன்று முந்திரி தோப்பில் தூக்குமாட்டியதுபோல் செட்டப் செய்துவிட்டு தலைமறைவாகியதாகவும்,
தற்போது போலீஸார் விசாரணையில் சிக்கிக் கொண்டதாகவும்,அவர்கள் செய்த குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

Leave a Comment