Crime

“என்னால மூச்சு விட முடியல” என கதறிய பெண் கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொலை!

“என்னால மூச்சு விட முடியல” என கதறிய பெண் கழுத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொலை!

இந்த சம்பவம் ஜெய்ப்பூரில் நடந்தேறி உள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 20 வயது பெண் ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்னால் மல்லேஷ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.சமீபத்தில் பெண்ணின் பெற்றோர்கள் இறந்து விட்டதால் அவர் மனம் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார் என கூறப்படுகிறது.

பேய் பிடித்து விட்டதாக நினைத்து அவரது குடும்பத்தார் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.அதனை தொடர்ந்து அந்த மந்திரவாதியும் பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறது என கூறி அடித்து உதைத்து கொடுமை செய்துள்ளார்.
பெண்ணை கட்டிலில் தள்ளி பெண்ணின் கழுத்தின் மீது ஏறி அமர்ந்து உள்ளார். குடும்பத்தார் எதுவும் சொல்லாமல் வேடிக்கை மட்டுமே பார்த்து வந்துள்ளனர்.

மந்திரவாதி ஷியாம் கழுத்தின் மீது அமர்ந்ததால் அந்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.அதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தார் அருகில் உள்ள மருத்துவமனையில் சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறந்து போன பெண் குடும்பத்தினர் மந்திரவாதி ஷியாம் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் மந்திரவாதி ஷியாமை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்தப் பெண்ணின் பிரேத பரிசோதனைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

Leave a Comment