இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!!

0
143

இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!!

நாட்டில் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் பல பேர் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உரிய நபர்களை பணிகளுக்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய அரசு தேர்வாளர் ஆணையத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு தேர்வாளார் ஆணையத்தில் 1558 காலி பணியிடங்கள் உள்ளன. எனவே விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனம்:
மத்திய அரசு தேர்வாளர் ஆணையம்

பணியின் பெயர்:
Multi-tasking( Non- technical) staff & havaldar

காலி பணியிடங்கள்:
MTS யில் 1198 காலி பணியிடங்களும்,
Havaldar in CBIC and CBN யில் 360 காலி பணியிடங்கள் என மொத்தமாக 1558 காலி பணியிடங்கள் உள்ளது.

விண்ணப்பிக்கும் தேதி:
30-06-2023 to 21-07-2023

வயது வரம்பு:
இது விண்ணப்பிக்க 18 வயதிலிருந்து 27 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி:
விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் தேர்வு அல்லது அதற்கு சமமான ஏதேனும் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு வைக்கப்படும்.
Havaldar பதவிக்கு மட்டும் physical efficiency test (PET)/ physical standard test (PST) நடத்தப்படும்.

விண்ணப்ப கட்டணம்:
இதில் SC/ST/PwBD/ESM ஆகியவர்களுக்கு கட்டணம் கிடையாது.
மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.100/- கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வம் உடையவர்கள் ஜூலை மாதம் 21ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
https://ssc.nic.in/

இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு வேலை வாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Previous articleஇனி லஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்காதீர்கள்!! இதை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்!!
Next articleஇந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயின் பக்கமே போகாதீங்க!!எச்சரிக்கை அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து!!