பியூட்டி பார்லர் போகாமலே உங்கள் முகம் பளிச்சென்று மின்னும்! இயற்கை அழகிற்கு இதோ சில டிப்ஸ்!
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. மற்றவர்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என அழகு சாதன பொருட்களை யோகிப்போம். நாம் தினசரி உபயோகிக்கும் அழகு சாதன பொருட்களில் உள்ள செயற்கைப் பொருட்களால் சருமம் நாளைடைவில் தோல் சுருக்கம், முகப்பரு, தோல் தளர்வு, அலர்ஜி போன்றவைகள் ஏற்படுகின்றன.
நாம் பகல் முழுவதும் செயற்கை அழகு சாதன பொருட்களை உபயோகித்தாலும் இரவு நேரங்களில் இயற்கையான முறையில் நமது முகத்தை பராமரிப்பதால் என்றும் இளமையாக இருக்கும். இதோ இது உங்களுக்கான டிப்ஸ் …
தேன்;
தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இயற்கையாகவே உள்ளது. இரவில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி பின் மிருதுவான துண்டால் துடைத்த பிறகு சிறிதளவு தேனை எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து அல்லது காலையிலும் முகத்தை கழுவலாம். இவ்வாறு செய்வதால் முகத்தில் வெயிலால் ஏற்படும் கருமை நீங்கும் முகப்பரு மற்றும் தோலில் ஏற்படும் வறட்சியை தடுக்கும்.
பால் பவுடர்;
பால் பவுடரில் பயன்படுத்தி முகத்திற்கு பேக் போடுவதால் உங்கள் முகத்தில் உள்ள டேனை நீக்கி இயற்கையான பளபளப்பை கொடுக்கும். ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஆரஞ்சு சாறு மற்றும் கடலை மாவு ஆகிய மூன்றையும் கலந்து பேஸ்ட் தயார் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். நீங்கள் உடனடியாக வித்தியாசத்தை பார்ப்பீர்கள்.