அதிமுகவின் பன்னீர்செல்வம் அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அவர் பத்திரிக்கையாளர்களிடம் அப்போது தெரிவித்தது பன்னீர்செல்வத்தை முனுசாமி தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பழனிச்சாமி எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவருடைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை நான் வெளியிடுவேன். கட்சியின் அலுவலகத்தில் விலையுயர்ந்த பொருட்கள் திருடு போனதாக புகார் தெரிவித்துள்ளார்கள். அங்கு விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
சின்னத்திற்கு எதிராக செயல்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி கொடநாட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தேறி உள்ளது. ஜெயலலிதா வசித்த வீட்டிற்கு காவல் போடாதவர், அதோடு அவருடைய வீட்டை தனியார் வீடு என்று தெரிவித்தவர், நாங்கள் வழங்கிய புகாரினடிப்படையில் 2 முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மிக விரைவில் மற்றவர்கள் மீதான பட்டியலை வெளியிடுவோம் என்று கூறினார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு கட்சி அலுவலகத்துக்குள் பன்னீர்செல்வம் செல்வார். கட்சி தலைவரும், பொருளாளரும், அவரே. அதிமுக அழிந்து விடக்கூடாது என்று நினைப்பவர் பிரதமர்
அவருக்கு துரோகம் செய்ய முயன்றவர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை. எந்த கட்சியும் சமரசம் செய்யுமளவிற்கு அதிமுகவினர் இல்லை. கொடி, கட்சியின் சின்னம், இரண்டுமே பன்னீர்செல்வம் தலைமையிலிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.