நேற்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ! அவசர நிதி வழங்க கோரிக்கை!

0
99
The Chief Minister met Prime Minister Modi yesterday! Request for emergency funding!
The Chief Minister met Prime Minister Modi yesterday! Request for emergency funding!

நேற்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ! அவசர நிதி வழங்க கோரிக்கை!

ஆந்திர முதல்வா் இரண்டு நாட்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போதுஅவர் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அந்த பேச்சு வார்த்தையில் போதிய நிதி இல்லாத காரணத்தால் போலாவரம் நீா்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றுவதில் காலத்தாமதம் ஏற்படுவதாகவும், திருத்தப்பட்ட செலவாக  ரூ. 55,548.47 கோடிக்கு ஒப்புதல் வழங்கும்படியும் கேட்டுக்கொண்டாா். மேலும், இத்திட்டத்தின் கட்டுமான செலவிற்காக ரூ.10,000 கோடியை அவசரகால நிதியாக விடுவிக்குமாறும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து போலாவரம் நீா்பாசனத் திட்டம் 2.91 லட்சம் ஹெக்டோ் பாசன பரப்பிற்கும் 960 மெகா வாட் மின்உற்பத்திக்கும் தொழிற்சாலைகள் மற்றும் 540 கிராமங்களின் நீா்த்தேவையைப் பூா்த்திசெய்யும் வகையிலும், கோதாவரி ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என விளக்கம் அளித்தார். நிதிக் குழுவால் மாநிலத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வருவாய் இடைவெளிக்கான நிதி ரூ.32,625 கோடியையும், ஒய்எஸ்ஆா் மாவட்டத்தில் உருக்கு ஆலை அமைப்பது, 12 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது,விஜயநகர மாவட்டத்தில் சா்வதேச விமான நிலையம் அமைப்பது போன்ற கோரிக்கைகளையும் விடுத்தார்.