நீ சரியா நிக்கல!..பிளஸ் டூ மாணவனை பளார் என்று அறை விட்ட ஆசிரியர்!!தனி அறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு!?
ராஜஸ்தான் மாநிலத்தில் ரிங்கஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்கு தினமும் காலை வேளையில் பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பல மாணவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது பிளஸ் டூ மாணவர்களும் வந்திருந்தனர்.வரிசையாக நின்றவர்கள் மத்தியில் ஒரு பிளஸ் டூ மாணவன் மற்றும் வரிசையில் நிற்காமல் சற்று ஒதுங்கி இருந்தார்.இதை கண்ட அருகில் இருந்த ஆசிரியர் ஒருவர் சக மாணவர்களிடம் சொல்லி சரியாக நிற்கும் படி சொல்லிருந்தார்.
அவர் கூறியதை மீறி அந்த மாணவன் ஆசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.இதனால் கோபமடைந்த ஆசிரியர் அந்த மாணவனின் கன்னத்தில் அறைந்தார்.இதனை தொடர்ந்து அந்த மாணவனின் செயல் தலைமை ஆசிரியர்களிடம் சென்றது.பின் அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அந்த மாணவனை தனி அறைக்கு அழைத்து சென்றனர்.
சில ஆசிரியர்கள் சேர்ந்து அந்த பிளஸ் டூ மாணவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.இதனை அறிந்த மாணவரின் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இச்சம்பவங்கள் குறித்து மாணவரின் பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் போலீசார்கள் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.இச்சம்பவம் பள்ளியில் உள்ள சக மாணவர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.