சென்னை அருகே பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர்! பின்னணி என்ன?

Photo of author

By Sakthi

சென்னை அருகே பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர்! பின்னணி என்ன?

Sakthi

சென்னை புறநகர் பகுதியாக இருக்கும் மணலி பாடசாலைப் பகுதியில் இருக்கின்ற அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று ஊரடங்கு காரணமாக, மூடப்பட்டு இருக்கிறது.மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக வகுப்புகள் நடந்து வருகின்றன.

பள்ளி மூடப்பட்டு இருப்பதால் சில மர்மநபர்கள் பள்ளி வளாகத்தில் சுற்றி திரிந்ததாக தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி வளாகத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததாக சொல்லப்படுகிறது. அவருடைய தலை, முதுகு, போன்ற இடங்களில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்ததாக தெரிந்திருக்கிறது.

இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கே வந்த காவல்துறையினர் அந்த பிரேதத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதல்கட்ட விசாரனையில் இறந்தது மணலி அன்பழகன் தெருவை சார்ந்த சாக்ரடீஸ் என்று தெரிய வந்திருக்கிறது.

மூடியிருந்த பள்ளியில் அந்தப்பகுதியில்.சிலர் கஞ்சா படிப்பதற்காக வருகை தந்து இருக்கலாம். அப்போது போதையில் ஏற்பட்ட தகராறில் பெயரில் இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற விதத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனாலும் கவர்ச்சியாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிகிறது.