சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை-திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Photo of author

By Savitha

திண்டுக்கல்லில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பு.

திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சகாயபெஞ்சமின் (வயது 30). இவர் கடந்த 2019-ம் ஆண்டு திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வடக்கு போலீசார் சகாய பெஞ்சமினை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி சரண் இன்று தீர்ப்பளித்தார்.

இதில் குற்றம்சாட்டப்பட்ட சகாயபெஞ்சமினுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், 363 பிரிவின் (சிறுமியை கடத்துதல்) கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.