வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழா!
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌவுதியா கல்லூரியில் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள், கம்பம் சட்டமன்ற
உறுப்பினர் . என்.ராமகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் தொழிற் திறன் பயிற்சி சேர்க்கைக்கான சான்றிதழ்களை இளைஞர்கள், இளைஞனிகளுக்கு வழங்கினார்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி, மகளிர் திட்ட அலுவலர் ஜெ.ரூபன் சங்கர்ராஜ், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா,
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் இன்பென்ட் பணிமயா ஜெப்ரின் உட்பட பலர் உள்ளனர்.