ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக இளைஞர் பலி! சோகத்தில் ஆழ்ந்த பகுதி மக்கள்!

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக இளைஞர் பலி! சோகத்தில் ஆழ்ந்த பகுதி மக்கள்!

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஒலகம் ராஜகுமாரனூரை சேர்ந்தவர் சண்முகம் (56). இவரது மகன் கார்த்தி (28). நினைவில் கார்த்திக்கும் திருமணம் ஆன நிலையில் அவரது மனைவியுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படும். அந்த கருத்து வேறுபாட்டினால் கார்த்திக் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்தி ஓலக்கடம் சந்தையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் அவரை பாம்பு ஒன்று கடித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளது. இதனையடுத்து பாம்பு கடித்த பயத்தால் எழுந்து ஓடிய கார்த்தி மயங்கி கீழே விழுந்துள்ளார்.

மேலும் இது குறித்து தகவல் இருந்த சண்முகம் கார்த்தியை மீட்டு பூதப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தார். மேல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறினார்கள். மேலும் இது குறித்து தகவல் அறிந்த வெள்ளி திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment