வளர்ந்து வரும் நவீன காலங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைத் தளங்களை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். சமூக வலைத்தளங்களில் என்னதான் நன்மைகள் இருந்தாலும், அதிகப்படியான க்ரைம்களும் மேலோங்குகின்றன. மேலும் சிறியவர்களின் தனிப்பட்ட விஷயங்கள், பண மோசடி, கவனச் சிதறல் மற்றும் பயனற்ற தகவல் பரிமாற்றம் ஆகியவை நிகழ அதிக வாய்ப்புண்டு. இதனால், அனுபவம் மிக்க பெரியவர்களே பாதிக்கப்படுகின்றனர். அப்படி இருக்க, சிறியவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு செய்வது சரியா? தவறா? எனக் கூட அந்த வயதில் தெரியாது. இதன் அடிப்படையில் தான் இந்திய அரசு ஒரு புது சட்டத்தை உருவாக்கியுள்ளது.
அதன்படி, 18 வயதுக்கு கீழே உள்ள மாணவ, மாணவிகள் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடர முடியாது. அப்படி, அவர்கள் படிப்புக்கு அத்தியாவிஷயம் என்றால், அவர்களது பெற்றோர்களின் அனுமதி பெற வேண்டும். அதாவது மைனர் வயதினர் பெற்றோரின் அனுமதியோடு சமூக வலைதளங்களில் கணக்கு ஆரம்பித்து உபயோகிக்கலாம். அவ்வாறு, அவர்கள் உபயோகிக்கும் பட்சத்தில், சமூக வலைதளங்கள் பெற்றோரின் அனுமதியை உறுதி செய்ய வேண்டும் என மாணவர்கள் நலன் கருதி இந்திய அரசு புதிய ஆணை பிறப்பித்துள்ளது.