காதலை ஏற்க மறுத்த இளம்பெண்.. ரகளையில் ஈடுப்பட்ட இளைஞர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

Photo of author

By Janani

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்.. ரகளையில் ஈடுப்பட்ட இளைஞர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

Janani

காதலை ஏற்கமறுத்த மாணவியின் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுப்பட்டவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த விஜய் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தினமும் அந்த பெண் கல்லூரிக்கு செல்லும் போதும் திரும்பும் போதும் அவரை காதலை ஏற்று கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவதன்று அந்த பெண் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது வந்த விஜய் அவரிடம் மீண்டும் காதலை ஏற்றுகொள்ள சொல்லி வற்புறுத்தியுள்ளார்.அதற்கு அந்த மாணவி மறுக்கவே அவரை விஜய் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த மாணவியின் வீட்டிற்கு சென்ற விஜய் மற்றும் அவரது நண்பர்கள் ரகளையில் ஈடுப்பட்டனர். இதனை அறிந்த அந்த கிராம மக்கள் அந்த இளைஞர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனை அடுத்து, இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதனை அடுத்து, அந்த இளைஞர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.