இனியும் தடை செய்யவில்லையென்றால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும்! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

0
259
Anbumani Ramadoss
Anbumani Ramadoss

இனியும் தடை செய்யவில்லையென்றால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும்! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து தற்கொலைகள் நடைபெற்று வரும் சூழலில் இனியும் அதை தடை செய்யவில்லையென்றால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது.

சென்னை மணலியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற தானி ஓட்டுனர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தானி ஓட்டுனரின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் 34-ஆவது தற்கொலை ஆகும். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் இத்தகைய நிகழ்வுகள் தினசரி நடப்பதும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும் தடுக்க முடியாததாகி விடும்!.

வாழ்க்கையில் முன்னேறும் நோக்கத்துடன் மகளிர் குழுவில் மனைவி கடனாக பெற்று வந்த ரூ.50 ஆயிரத்தை ஆன்லைனில் சூதாடி பார்த்திபன் இழந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் ஒருவரை எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் இல்லை!.

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. ஆன்லைன் சூதாட்டம் சமூகத்தை அழிக்கிறது. அதைத் தடுக்க சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உயர்நீதிமன்றமே கூறியிருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஆளுனர் இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும்! என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Previous articleகொடி பிடிக்கவும் கோஷம் போடவும் தான் நாங்களா? இனி கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை –  சர்ச்சையை கிளப்பிய நாராயணசாமி
Next articleகாதலை ஏற்க மறுத்த இளம்பெண்.. ரகளையில் ஈடுப்பட்ட இளைஞர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here