11ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி குழந்தை திருமணம் செய்த இளைஞர்! போக்சோவில் கைது தர்மபுரி அருகே பரபரப்பு!

0
203

தர்மபுரி அருகே இருக்கின்ற அரசு மேல்நிலைப்பள்ளிகள் 11ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சார்ந்த நவீன்குமார் என்பவருடன் சமூக வலைதளம் மூலமாக பழகி வந்துள்ளார்.

தொடர்ந்து அடிக்கடி சமூகவலைதளத்தில் கருத்துகளை பகிர்ந்து பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.

இப்படியான நிலையில், கடந்த மாதம் சிறுமியை ஆசை வார்த்தை கூறி நவீன்குமார் தர்மபுரிக்கு வந்து கடந்து சென்றிருக்கிறார்.

வீட்டைவிட்டு பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இதனையடுத்து சிறுமியின் கைபேசி எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்தார்கள்.

அப்போது தர்மபுரியைச் சேர்ந்த சிறுமிக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை நவீன்குமார் என்பவருக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது.

5இதனை தொடர்ந்து நவீன்குமாரையும் அந்த சிறுமியையும் அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சிறுமியை கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்ததாக நவீன்குமாரை தர்மபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர் சட்டத்தின்கீழ் கைது செய்கிறார்கள்.

அதோடு பாதிக்கபட்ட சிறுமியை சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Previous articleநோய்த்தொற்று பரவல்! 50 கோடியை கடந்த உலகளாவிய குணமடைந்தவரின் எண்ணிக்கை!
Next articleஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி சுற்றுக்கு முன்னேற போவது யார்? ராஜஸ்தான் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை!