இந்தியாவில் முதல்முறையாக யூடியூப் நேரலை வழக்கு விசாரணை ஒளிபரப்பு !!

 

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் முதல் முறையாக யூடியூப் நேரலை வழக்கு விசாரணை ஒளிபரப்பு நடத்தப்பட்டது.

இதுநாள் வரை உயர் நீதிமன்ற விசாரணைகள் குறித்து தகவல் அறிவது கடினமாக ஒன்றாக இருந்து வந்த நிலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக வழக்கு விசாரணை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் யூடியூப் மூலமாக நேரலை ஒளிபரப்பு முறையை குஜராத் உயர்நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று தலைமை நீதிபதி விக்ரம்நாத் அமர்வில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில், முதல்முறையாக யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது இதனைத்தொடர்ந்து இன்று முதல் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடக்கும் அனைத்து வழக்குகளும் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் வழக்குகளை காணொளி வாயிலாக நடந்துவந்த நிலையில் , மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்களின் முழு விவரத்தை அறிந்து கொள்ள தற்போது அமல்படுத்தப்பட்ட இந்த யூடியூப் நேரலை விசாரணை மேலும் உதவியாக இருக்கும் என்று வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தில் நடக்கும் விவாதங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், இந்த புதிய கட்டமைப்பு வசதி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், இது குறித்து உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் நேரலை விசாரணை துவங்கி இருப்பது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், இது பொதுமக்களிடையே பெரும் உதவியாக அமையும் என்று தலைமை நீதிபதி விக்ரம்நாத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment