கறுப்பர் கூட்ட ஆபாசவாதி காவல்நிலையத்தில் சரண்! தமிழர்களிடையே வலுக்கும் எதிர்ப்பு.!!

Photo of author

By Jayachandiran

கறுப்பர் கூட்ட ஆபாசவாதி காவல்நிலையத்தில் சரண்! தமிழர்களிடையே வலுக்கும் எதிர்ப்பு.!!

Jayachandiran

கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூடியூப் மூலமாக கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக இணையத்தில் பேசி வீடியோ வெளியிட்ட நபர் காவல்நிலையத்தில் சரண்டைந்தார். யூடியூப் மூலமாக தமிழர்களின் வழிபாட்டு முறையை தரக்குறைவாக பேசுவதும், இந்து மத கடவுள்களை அநாகரிகமாக விமர்சிப்பதை செய்துவந்த கறுப்பர் கூட்டத்தின் மீது பா.ஜ.க சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

இதையடுத்து கறுப்பர் கூட்டம் சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் வீடியோவை வெளியிட்ட செந்தில்நாதன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே அந்த வீடியோவில் பேசிய சுரேந்திரன் என்பவர் முதலில் தலைமறைவாக இருந்து பிரச்சினையின் வீரியத்தை பார்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு அளித்தார்.

 

சுரேந்திரன் ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும் சூழலில், புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் தற்போது சரண் அடைந்துள்ளார். அவரை தமிழகம் கொண்டு தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர். தமிழர்களின் வரலாற்றையும், ஆன்மீக கருத்துக்களையும், கடவுள்களையும் திட்டமிட்டே விமர்சித்தால் சுரேந்திரனை போல் கைதாக நேரிடும் என்று பகுத்தறிவு பேசும் போலி நாத்திகவாதிகள் பலர் பயத்தில் ஊமையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.