இ-பாஸ் இல்லாமல் சென்ற சுரேந்திரன் மீது புதுச்சேரி போலீசார் வழக்குபதிவு

Photo of author

By Jayachandiran

இந்து கடவுள்களைப் பற்றிய புராணங்களை ஆபாச புராணங்களாக சித்தரித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் இணைய சேனல் வெளியிட்டு வந்தது. சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் பற்றிய தரக்குறைவான சித்தரிப்பு வீடியோ வெளியானதை அடுத்து, இது தொடர்பான நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

இதையடுத்து கறுப்பர் கூட்டம் சேனலின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவை வெளியிட்ட செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் வீடியோவில் பேசிய சுரேந்திரன் என்பவர் கடந்த 16 ஆம் தேதி புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரண்டைந்தார்.

 

இதன்பிறகு சென்னை போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், செந்தில்வாசன் மற்றும் சுரேந்திரனை ஜீலை 30 வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உரிய இ-பாஸ் இல்லாமல் கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் மீது புதுச்சேரி அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செயத்துள்ளனர்.