இலவச பேருந்து பயணத்திற்காக பெண் போல வேடமணிந்த யூடியூபர்..வைரலாகும் வீடியோ.!!

Photo of author

By Vijay

புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் கொடுத்துள்ளது. இது பலருக்கும் மிகவும் உதவியாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் கன்னியாகுமரி குழித்துறை பகுதியைச் சேர்ந்த யூடியூபே சர்ச் என்ற இளைஞன் ஒரு குறும்படத்தை எடுத்துள்ளார்.

அதில் அவர் பயணம் செய்யும் பொழுது இது ஆண்களின் நடவடிக்கைகள் மற்றும் நடத்துனரின் செயல்கள் ஆகியவற்றை படமாக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

மேலும் இந்த குறும்படத்தில் ஆண்களுக்கு இலவச பயணம் கிடைக்கவில்லை என்ற மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். முழுவதுமாக பெண்ணைப்போல ஒப்பனை செய்த அவர் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் நடனமாடி பொதுமக்களின் ரியாக்சனை பதிவு செய்துள்ளார். மேலும் பெண்கள் உள்ளது ஓட்டினால் பொதுமக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் காட்டியுள்ளார்.

12 நிமிடங்கள் ஓடுகின்ற இந்த குறும்படம் தற்போது சமூக வலைதளங்களில் கலவையான கமெண்ட்டுகளை பெற்று வருகிறது.