இந்த வாரத்தில் பணியிடத்தில் அதிகாரிகளின் பாராட்டு மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

Photo of author

By Gayathri

இந்த வாரத்தில் பணியிடத்தில் அதிகாரிகளின் பாராட்டு மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஆளுமை அதிகரிக்க உள்ளது. மேலும், வேலை செய்யும் இடத்தில் தகுந்த மரியாதை, பாராட்டு பெறுவீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே இந்த வாரம் நீங்கள் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக பணிகளை செய்வீர்கள். வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். ஆனால், வேலை செய்யும் இடத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த வாரம் நல்ல செய்தி வந்து சேரும். முதலீட்டில் நல்ல லாபம் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் புதிய மாற்றங்கள் கிடைக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இந்த வாரம் நீங்கள் சிறந்த பலன்களை பெறப்போகிறீர்கள். மிகப் பெரிய ஒப்பந்தங்களில் பெரிய அளவில் வெற்றி பெறப்போகிறீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பண வரவு கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு லாபமும், வெற்றியும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அனைவராலும் பாராட்டை பெறுவீர்கள். ஆனால், வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பளு அதிகமாக இருக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு அதிக உற்சாகம் பிறக்கும். பணத்தை சேமித்து வையுங்கள். அதனால், உங்கள் குடும்பத்திற்கு பலன் அளிக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே இந்த வாரம் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளிடம் நல்ல பெயரை எடுப்பீர்கள். உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டம் தேடி வரும். உங்களுடைய பேச்சால் மற்றவர்களை கவர்ந்துவிடுவீர்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே இந்த வாரம் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் தகுந்த பாராட்டை பெறுவீர்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களே வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்கள் வெற்றி பெறும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே வேலை செய்யும் இடத்தில் விரைவாக வேலையை செய்து முடிப்பீர்கள். வேலைகளில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். மனஅமைதி பிறக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த வாரம் சிறப்பாக அமையும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத முடிவுகள் எடுப்பீர்கள். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். வேலையில் நிச்சயம் முன்னேற்றம் பிறக்கும்.