நான் ஒரு பெண் எனக் கூறி பல சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞர்!

0
271

23 வயது இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்குகளை துவக்கி தான் ஒரு பெண் எனக் கூறி பல சிறுமிகளை ஆபாச படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப சொல்லி தவறாக நடந்துகொண்ட அவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

குற்றம் சாட்டப்பட்டவர் அப்துல் சமத், ஏசி மெக்கானிக் என லக்னோவை சேர்ந்தவர் என தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவனை கைது செய்து விசாரணை செய்தனர்.

 

விசாரணையில், இவர் சிறுமிகளிடம் டீன் ஏஜ் பெண்களை போல் உரையாடலைத் தொடங்கி அவர்களிடம் ஆபாச படங்கள் மற்றும் போட்டோக்களை கேட்டு அதை பார்த்துள்ளார்.

 

துணை போலீஸ் கமிஷனர் (தெற்கு) அதுல் குமார் தாக்கூர், “ஃபதேபூர் பேரி காவல் நிலையத்தில் இருந்து எங்கள் குழு அப்துல் சமத்தை லக்னோவில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்து பல சிறுமிகளின் விவரங்கள் மற்றும் அவர்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய ஸ்மார்ட் மொபைல் போனை மீட்டது என தெரிவித்துள்ளார்.

 

ஆகஸ்ட் 27 அன்று பாதிக்கப்பட்ட ஒரு 15 வயது பாதிக்கப்பட்டவரிடமிருந்து புகார் பெறப்பட்ட பிறகு இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

விசாரணையின் போது, ​​அந்த இளைஞர் பயன்படுத்திய மொபைல் எண்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடிக்களின் விவரங்களைப் பெற வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு மெசேஜ் அனுப்பப்பட்டது.அந்த விவரங்களின் அடிப்படையில், போலீஸ் குழு லக்னோவிலிருந்து குற்றவாளியைக் கண்டுபிடித்தனர்.

 

விசாரணையின் போது, ​​குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு டீனேஜ் பெண்ணுடன் உரையாடலைத் தொடங்க தன்னை ஒரு பெண்ணாக அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் உரையாடலை தொடங்குகிறார்.

 

அந்த இளைஞர் இணைய அடிப்படையிலான சமூக தளங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், . ‘டெக்ஸ்ட் நவ்’ போன்ற வேறு சில அப்ளிகேஷன்களையும் அந்த இளைஞர் கற்றுக்கொண்டு அதில் அவர் பெண்களுக்கு செய்திகளை அனுப்புவது மற்றும் சர்வதேச எண்கள் மூலம் பெண்களுக்கு வீடியோ அழைப்புகள் செய்து அவர் கனடாவிலிருந்து ஒரு NRI ஆக தன்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி பேசு தொடங்கி உள்ளார் என போலீஸ் அதிகாரி கூறினார்.

 

உடனே சிறுமிகள் அவருடைய ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அந்த இளைஞருக்கு அனுப்பியபோது, ​​அவன் அவர்களை மிரட்டி மற்றும் அவற்றை சமூக ஊடகங்களில் பரப்பி உள்ளார். அவரிடம் பல இன்ஸ்டாகிராம் ஐடிகள் உள்ளன. அவனிடம் ஏகப்பட்ட இன்ஸ்டாகிராம் ஐடிகள் உள்ளன. அவன் ஒவ்வொரு முறையும் இன்ஸ்டாகிராம் ஐடியை மாற்றி வந்ததால் ஐடியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரி கூறியுள்ளார்.

 

 

Previous articleசிவன் மலை கண்ணாடி பெட்டியில் வைத்த பரிகார பொருள்! பலன் என்ன?
Next articleநாளை திறக்கப்படும் முதுமலை காப்பகம்! இவர்கள் வருகையை தவிர்க்க வேண்டும்!