நீரில் மூழ்கிய பாகிஸ்தான்! கதறும் மக்கள்! உதவி கேட்கும் அரசு!

0
288

 

பாகிஸ்தானில் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலாண்டில் 30 ஆண்டு சராசரியை விட கிட்டத்தட்ட 190% அதிக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது, மொத்தம் 390.7 மிமீ மழை பொழிந்துள்ளது.

இந்த மழை வெள்ளம் 380 குழந்தைகளை பலி வாங்கியுள்ளதாக என்று பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதியை மழை மற்றும் வெள்ளம் மூழ்கடித்து, 380 குழந்தைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர், ஐக்கிய நாடுகள் சபை செவ்வாயன்று “எதிர்பாராத காலநிலை பேரழிவு” என்று உதவி கோரி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

இராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமாக ஆங்காங்கு சிக்கித் தவித்த குடும்பங்களை கண்டு, அணுக முடியாத பகுதிகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றது. பாகிஸ்தானில் வரலாற்றுப் பிரளயம், வழக்கத்திற்கு மாறாக கடுமையான பருவமழையால் தூண்டப்பட்டது, வீடுகள், வணிகங்கள், உள்கட்டமைப்பு மற்றும் பயிர்களை அழித்தது நாசமாக்கியுள்ளது.

 

இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலாண்டில் 30 ஆண்டுகளின் சராசரியை விட 190% சதவீதம் அதிக மழையை பாகிஸ்தானில் பொழிந்துள்ளது. மொத்தம் 390.7 மில்லிமீட்டர்கள் (15.38 அங்குலம்). 50 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சிந்து மாகாணம், 30 ஆண்டு சராசரியை விட 466% அதிக மழையைப் பெற்று, கடுமையாகப் பாதிக்கப்பட்டு பெரும் அவஸ்த்திக்கு உள்ளாகியுள்ளது.

 

“நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தண்ணீருக்கு அடியில் உள்ளது” என்று அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்,

 

இங்கு வாழ்க்கை மிகவும் வேதனையாகி உள்ளது,” என்று தனது பெற்றோர் மற்றும் ஐந்து குழந்தைகளுடன் தங்குமிடங்களில் ஒன்றில் இருந்த 63 வயதான ஹுசைன் சாதிக், செய்தியாளர்களிடம் கூறியுள்ளார், அவரது குடும்பம் “எல்லாவற்றையும் இழந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

 

மருத்துவ உதவி போதுமானதாக இல்லை என்றும், அனைவருக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று செய்தியாளர்களிடம் உசைன் கூறியுள்ளார்.

 

பாகிஸ்தான் ராணுவத் தளபதியான ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா ஸ்வாட்டின் வடக்குப் பள்ளத்தாக்கிற்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து, “இயல்பு நிலைக்குச் செல்ல நீண்ட காலம் எடுக்கும்” என்று கூறியுள்ளார்,

 

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் $10 பில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக ஆரம்ப மதிப்பீடுகள் கூறுகின்றன, காலநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சமாளிக்க பாகிஸ்தான் உதவி கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleWow!! My Girl! What a timing! தன் குழந்தையை புகழ்ந்த ஆலியா வீடியோ!!
Next article107 கிலோவா? நடிகை ராஷ்மிகாவின் வீடியோ! மறக்காம பாருங்க!