அவர் கட்டிய தாலி மட்டுமே மிச்சம்!! கண்ணீரில் கவர்ச்சி நாயகி டிஸ்கோ சாந்தி!!

0
143
Only the thali he built is left!! Sexy heroine Disco Shanti in tears!!
Only the thali he built is left!! Sexy heroine Disco Shanti in tears!!

அவர் கட்டிய தாலி மட்டுமே மிச்சம்!! கண்ணீரில் கவர்ச்சி நாயகி டிஸ்கோ சாந்தி!!

90 கால கட்டங்களில் டிஸ்கோ சாந்தியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான ‘வெள்ளை மனசு’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி டிஸ்கோ சாந்தி என்றால் பட்டிதொட்டி எல்லாம் தெரியும் அளவிற்கு புகழ் பெற்றார்.இவர் ஆடிய கவர்ச்சி பாடல்களில் ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ என்ற பாடல் மிகவும் புகழ் பெற்ற ஒன்று.இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.இந்நிலையில் 4 மாத குழந்தையாக இருந்தபோது இவர்களது மகள் இறந்து விட்டார்.இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு காதல் கணவர் ஸ்ரீஹரி உடல்நல குறைவால் காலமானார்.

இதையடுத்து டிஸ்கோ சாந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது சினிமா பயணம் மற்றும் தன் கணவர் இறப்பு குறித்து கூறினார்.குடும்ப சூழ்நிலை காரணமாக தான் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாட தொடங்கினேன்.இதனால் ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு நாளும் நான் அழுது புலம்பி இருக்கின்றேன்.

அதன் பிறகு ஸ்ரீஹரியும் நானும் தெலுங்கு படங்களில் சேர்ந்து நடித்தபொழுது தங்களுக்குள் காதல் மலர்ந்து.அதன் பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.எங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த தருணத்தில் ஸ்ரீஹரி படப்பிடிப்பிற்காக மும்பை சென்றிருந்த பொழுது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார்.

என் கணவர் இறப்பிற்கு பிறகு குடும்பம் வறுமையை நோக்கி சென்றது.
அவர் உயிரோடு இருந்தபொழுது நிறைய பேர் கடனாக பணம் பெற்றிருந்தனர்.ஆனால் அவரது இறப்பிற்கு பிறகு ஒருவர் கூட வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வில்லை.நாங்கள் கடனாக பெற்ற பணத்தை வாங்குவதற்காக மட்டுமே சிலர் வீட்டிற்கு வந்தனர்.

மேலும் நாங்கள் வாங்கிய கடனை எங்களிடம் இருந்த நகை,கார்,நிலம் போன்ற அனைத்தையும் விற்று தான் அடைத்தோம்.இப்போது என்னிடம் இருப்பது அவர் கட்டிய தாலி மட்டும் தான். எங்களிடம் உள்ள இரண்டு வீடுகளை வாடைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்ப செலவுகளை பார்த்து வருகிறோம்.திரையுலகில் தனக்கு பல நண்பர்கள் இருகின்றனர்.ஆனால் ஒருவர் கூட தாங்கள் என்ன செய்கிறோம் என்று கேட்கவில்லை என்று கண் கலங்கியபடி வருத்தத்துடன் கூறினார்.

Previous articleகச்சத்தீவின் வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!!
Next articleஅதிக எடை காரணமாக ஓட முடியாமல் ரன்அவுட் ஆன கிரிக்கெட்டர்… இணையத்தில் வீடியோ வைரல்…