இந்த 2 பொருள் போதும் 30 நாளில் முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர செய்யும்!
ஒருமுறை முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், முடி உதிர்வதை கட்டுப்படுத்துவது கடினம். பலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை உள்ளது. இதற்கு உணவுமுறை, மரபு போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
வயதானவர்களுக்கு மட்டுமே முடி உதிர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது, ஆனால் இது உண்மையல்ல. முடி உதிர்தல் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் நிகழலாம், அது டீன் ஏஜ் பருவத்திலிருந்தே தொடங்கலாம்.
1 லட்சம் தனிப்பட்ட முடிகள் இருக்கும் ஒருவரின் தலையிலிருந்து, சுமார் 100 முடிகள் தினமும் விழுந்து வளரும். இது சாதாரணமானது. ஆனால் இந்த எண்ணிக்கை 500-1000 ஐ எட்டினால், அது கடுமையான முடி உதிர்தல் ஆகும்.
முடி உதிர்வை இயற்கையாக கட்டுப்படுத்தி அடர்த்தியான கூந்தலை வளர செய்யும் இயற்கையான வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.
முடி வளர்ச்சிக்கான பொருட்களில் ஒன்று வெங்காயம். ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் இதனுடன் ஒரு ஸ்பூன் கிராம்பு சேர்த்து இரண்டையும் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் 250 மில்லி தண்ணீர் ஊற்றவும். பின் இதில் அரைத்த விழுதை சேர்க்கவும். இதை நன்கு கொதிக்க விடவும்.
நன்றாக கொதிந்ததும் இதனை ஒரு பவுலில் வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலைக்கு ஸ்பிரே செய்து அரை மணி நேரம் ஊற வைத்து மைல்டான ஷாம்பு கொண்டு தலையை அலசலாம். அல்லது ஒரு பஞ்சில் நனைத்து தலை பகுதி முழுவதும் வேர்கால்களில் படும்படி தேய்த்து ஊறவிடலாம்.
இதை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வர உங்களது தலைமுடியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து முடி நன்கு அடர்த்தியாக நீளமாக வளரும்.