Breaking News

இனி ஈஸியாக லோன் வாங்கலாம்!! SBI வங்கியின் சூப்பரான அப்டேட்!!

Now you can buy loan easily!! Super Update from SBI Bank!!

இனி ஈஸியாக லோன் வாங்கலாம்!! SBI வங்கியின் சூப்பரான அப்டேட்!!

எஸ்பிஐ வங்கி நிறுவனமானது தினந்தோறும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது யோனா எனப்படும் ஒரு செல்போன் செயலியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய செயலி வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பபை பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த எஸ்பிஐ வங்கி தனது யோனா செல்போன் செயலியை இன்னும் சற்று மாற்றம் செய்து புத்துப்பித்து நிறைய வசதிகளுடன் புத்தம் புது யோனா ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலியில் யுபிஐ பரிவர்த்தனை வசதிகள் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. யுபிஐ மூலமாக மற்றவர்களுக்கு பணத்தை செலுத்த QR கோர்டை ஸ்கேன் செய்து பின்பு பணத்தை அனுப்பலாம்.

மேலும், இந்த புதிய வசதிகளுடன் கூடிய செயலியில் புதிய வங்கி கணக்குகளை எளிதில் துவங்கலாம். பல பேர் லோன் வாங்க வங்கிக்கு வந்தும் கிடைக்காமல் அதிக நாட்களுக்கு சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

எனவே வாடிக்கையாளரின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த செயலியின் மூலம் கடன் பெறுவதற்கான புதிய வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கடன் பெற விரும்புபவர்கள் தனது விண்ணப்பத்தை அனுப்பலாம்.

இந்த புதிய செயலியின் வழியாக வீட்டு கடன் மற்றும் தனி நபர் கடன் போன்ற அனைத்து கடன்களுக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை அளித்த பிறகு கடன் தொகை அனைவருக்கும் வழங்கப்படும்.

இந்த செயலி வாடிக்கையாளர்கள் மத்தியில் வளர்ச்சி அடைவதை பொறுத்து மேலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று எஸ்பிஐ வங்கி தகவல் தெரிவித்துள்ளது.