இன்றோடு முடிகிறது ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான ரிசர்வ் வங்கியின் காலக்கெடு முந்துங்கள் மக்களே!!!
இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் ரூ.2000 நோட்டுகள் செல்லுபடியாகது என்றும் புழக்கத்தில் உள்ள நோட்டுகளையும் ரிசர்வ் வங்கியில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு விடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் தங்களிடமிருக்கும் ரூ.2000 நோட்டுக்களை அருகிலுள்ள வங்கியில் சென்று மாற்றிக்கொண்டனர். இதற்காக வங்கிகளில் தனிப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து வங்கிகள் கூறியதாவது நாட்டில் 93 சதவீதம் ரூ.2000 நோட்டுகள் மக்களிடமிருந்து பெறப்பட்டதாக கடந்த 1ம் தேதி ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி கொடுத்திருந்த கால அவகாசம் இன்று அதாவது செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இன்று முதல் மக்கள் 2000 நோட்டுகளை வழங்கினால் அவற்றை போக்குவரத்துக்கு கழகங்கள் பேருந்து நடத்துனர்கள் மற்றும் சிறு மற்றும் குறு தொழில் வியாபாரிகள் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.அதனை மீறி வாங்கினால் அதற்குண்டான முழு பொறுப்பும் பேருந்து நடத்துனர்கள் வியாபாரிகளுடையது எனவும் ரிசர்வ் அறிவித்துள்ளது.இதுபோல் அங்காடிகள்,திரையரங்குகள்,துணிக்கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்களிலும் 2000 ருபாய் நோட்டுக்களை மக்களிடமிருந்து வாங்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
2000 ருபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால் மறுபடி 2000 நோட்டுகளை மாற்றுவதற்கான மறு அறிவிப்பு அதாவது கால நீட்டிப்பு அறிவிக்கப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்தவண்ணம் உள்ளது.