இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அறிவிப்பு!! இனி ஹெல்மெட் கட்டாயம்!!
இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர் என்ற இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோவை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து வருகின்ற 26 ம் தேதி வாகன தணிக்கை மேற்கொள்ள படும்பொழுது யாரேனும் விதி மீறலில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இனி கோவை மாவட்டத்திற்குள் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன் படுத்தினால் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி வருகின்ற 26 ம் தேதி ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.இதில் காவல்துறை ,போக்குவரத்து துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டு துறை போன்ற துறை அலுவலர்களின் கீழ் இந்த குழு அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மாநகரத்தில் அதிகப்படியான ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை வாகனங்களில் பயன்படுத்துகிறார்களா என்று சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் விபத்து ஏற்படுவது குறித்து ஆராய்ந்ததில் ஹெல்மெட் அணியாததால் அதிக உயிர் சேதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர் பயணிப்பவர் என்று இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வருகின்ற 26 ம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.