எல்லா போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியாது

Photo of author

By Parthipan K

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான  ஜேம்ஸ் ஆண்டர்சன் திறமை வாய்ந்த பவுலர் ஆவார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 590 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் இங்கிலாந்து பாகிஸ்தான் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் தொடரில் கடந்த வாரம் முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்தது அந்த போட்டியில் இங்கிலாந்து அணி எதிர்பாரா வெற்றியை பெற்றது. இருப்பினும் ஆண்டர்சன் தனது பவுளிங்கில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதலால் அவர் மீது விமர்சனகள் எழுந்தன.

இதுகுறித்து அவரிடம் ஒய்வு பெறுவது பற்றி கேட்டபோது நீங்கள் இவ்வாறு கேட்பது வேதனையை அளிக்கிறது எல்லா போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியம் என்று கூற முடியாது ஒரு சில போட்டிகள் நமக்கு ஏமாற்றம் அளிக்ககூடிய  வகையில் தான் அமையும் அதை நாம் தாங்கிக்கொள்ள வேண்டும் தற்போதும் நான் இன்னும் விக்கெட் வீழ்த்த மிகுந்த பசியில் உள்ளேன் இப்போதைக்கு ஒய்வு பெறுவது  குறித்து எந்த எண்ணமும் இல்லை என்று கூறினார்.