எல்லையில் வீரர்கள் மீண்டும் மோதலா.? இணையத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு!

Photo of author

By Jayachandiran

சிக்கிம் பகுதியில் உள்ள உயரமான மலைப்பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இந்திய எல்லை பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி இந்தியா – சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோசமான சம்பவத்தில் இந்திய தரப்பில் தமிழக வீரர் ஒருவர் உட்பட 20 ராணுவ வீரர்களும், சீன தரப்பில் 35 இராணுவ வீரர்களும் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து எல்லையில் இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டது. உயர்மட்ட அதிகாரிகளின் மூலம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில் சிக்கிமின் உயரமான மலைப்பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே மீண்டும் மோதல் உண்டாகியுள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்த காணொளியில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் மோதிக்கொள்வது போல் பதிவாகியுள்ளன. இந்திய ராணுவ வீரர் சீன ராணுவத்தை தாக்குகிறார். அதன் பின்னர் இருபக்கத்திலும் சண்டையிட வேண்டாம் திரும்பிச் செல் என்று பேசப்படுகிறது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை. இருப்பினும் இரு நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.