ஒரே நாளில் 117 கோடி! மொத்தம் 624 கோடி மது விற்பனை! எங்கு தெரியுமா?

Photo of author

By Kowsalya

ஓணம் பண்டிகையை ஒட்டி கேரளாவில் ஒரே நாளில் 117 கோடி மது விற்பனை ஆனது தரவுகளில் குறிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை தான் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. அப்படி தொடர்ந்து பத்து நாட்கள் வரை நடைபெறும் இந்த ஓணம் பண்டிகையில் முக்கியமான நாட்களில் மட்டும் 117 கோடி மது விற்பனை ஆகியுள்ளதாக இந்திய மாநில பானங்கள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்பினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகை காலங்களில் மதுபான விற்பனையை பாதித்து இருந்த நிலையில் கடந்த ஆண்டு, திருவோணத்திற்கு முந்தைய நாளான உத்ராடம் அன்று விற்பனை ₹85 கோடியைத் தொட்டுள்ளது, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பெவ்கோ தரவுகள் படி  HT-ஆல் மதிப்பாய்வு செய்துள்ளது.

மதுபானம் மற்றும் லாட்டரி ஆகியவை இந்த மாநிலத்திற்கு அதிக வருவாய் ஈட்டித் தருகின்றன. மாநிலத் தரவுகளின்படி, கடந்த சில ஆண்டுகளில் கேரளா சராசரியாக மதுபானம் மூலம் ₹14,000 கோடியும், லாட்டரி மூலம் ₹10,000 கோடியும் ஆண்டு வருமானம் ஈட்டி உள்ளது என சொல்லப்படுகிறது.

வெள்ளிக்கிழமை பெவ்கோ தரவுகளின்படி, ஓணம் பண்டிகைக்கு முந்தைய வாரத்தில், கடந்த ஆண்டு ₹529 கோடியாக இருந்த மது விற்பனை, ₹624 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு, முன்பே திருவோணம் விடுமுறை என அறிவிக்கப்பட்டதால், மக்கள் முன்கூட்டியே மது  வாங்கத் தூண்டியது, அதிக விற்பனைக்கு வழிவகுத்தது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

பத்து நாள் திருவிழா காலத்தின் மொத்த வருவாய் ₹700 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குப் பிறகு தான் உறுதியான வருவாய் வெளிவருமாம்.

மாநிலத்தில் ஆல்கஹால் மீதான வரிகள் மிகவும் அதிகமானவை – ₹100-150 விலையில் உற்பத்தி செய்யப்படும் ரம் பாட்டில் ₹600-800க்கு பெவ்கோ விற்பனை நிலையங்களில் விற்கப்படுகிறது.

மாநிலத்தின் தனிநபர் மது நுகர்வு தேசிய சராசரியான 5.7 லிட்டருக்கு எதிராக 8.5 லிட்டராக உள்ளது. கடந்த ஆண்டு தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி (NFHS) கிராமப்புறங்களில் 18.7% ஆண்களும், நகர்ப்புறங்களில் 21% ஆண்களும் மது அருந்துகின்றனர். இருப்பினும், சமீபத்திய NHFS கணக்கெடுப்பு (2022), கடந்த ஐந்து ஆண்டுகளில் மதுபான நுகர்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவதையும் காட்டுகிறது.

2021 ஆம் ஆண்டில், கேரள உயர் நீதிமன்றம் அரசாங்கத்தை இழுத்து, மதுபானம் வாங்குபவர்களுக்கு முறையான கடைகள் மற்றும் வசதிகளை வழங்க உத்தரவிட்டது.

2015 ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியானது மாநிலத்தின் மதுபானக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்தது, இது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை (IMFL) வழங்க அனுமதித்தது. இந்த நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் 700 பார்கள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்பட்டன. பின் உச்ச நீதி மன்றம் அதனை மாற்ற உத்தரவு வெளியிட்டது.