ஒற்றை தலைவலி என்று சொல்லக்கூடிய migraine பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களை நாம் பார்த்திருப்போம். அவர்கள் ஒரு வாரம் மட்டும் பாலுடன் இதை கலந்து கொடுத்த வரும்பொழுது அவர்களுக்கு வந்த ஒற்றைத் தலைவலியும் குணமாகும், கண்பார்வையும் சரியாகும்.
தொடர்ந்து இதை இரவில் சாப்பிட்டு வரும் பொழுது கண் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது பயன்படும். கிட்டப்பார்வை தூரப்பார்வை கண் மங்குதல், கண் எரிச்சல் ஆகியவை சரியாகும்.
தேவையான பொருட்கள்:
1. கொப்பரை தேங்காய்
2. கசகசா
3. பாதாம் பருப்பு
4. வெள்ளை மிளகு
5. கற்கண்டு
6. பால் அரை லிட்டர்.
செய்முறை:
1. முதலில் ஒரு கொப்பரை தேங்காயை எடுத்துக் கொள்ளவும்.
2. கொப்பரை தேங்காயின் நடுவே ஒரு துளை இட்டுக் கொள்ளவும். சதுர வடிவில் வெட்டி எடுத்து கொள்ளவும்,
3. அதில் 20 கிராம் அளவிற்கு கசகசாவை சேர்த்துக் கொள்ளவும்.
4. பின் இருபது கிராம் அளவிற்கு பாதாம் பருப்பை சேர்த்துக் கொள்ளவும்.
5. பின் வெட்டிய மிச்சமான தேங்காய் வைத்து அதை அப்படியே மூடிக்கொள்ளவும்.
6. ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
7. அதில் இந்த தேங்காயை அப்படியே வைக்கவும்.
8. இப்பொழுது அதை பால் கால் லிட்டர் வரும் வரை கொதிக்க வைக்கவும்.
9. பால் உள்ளே சென்று விடக்கூடாது.
10. கால் லிட்டர் வரை காய்ந்ததும் அந்தத் தேங்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி அனைத்து பொருளையும் மிக்ஸியில் போட்டு கொரகொர பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
11. வெள்ளை மிளகு ஒரு 10 கிராம் அளவிற்கு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
12. பின் கற்கண்டை தேவையான அளவு எடுத்து கொள்ளவும்.
13. கற்கண்டை இடித்து அந்த கலவையுடன் சேர்த்து கொள்ளவும்.
14. படுக்கப் போகும் முன் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து குடித்து வர அத்தனை கண் பிரச்சனைகளும் சரியாகிவிடும்.