கடுமையான முதுகு வலி முழங்கால் வலி நீங்க இதனை தடவுங்கள்!! உடனடி தீர்வு!!

Photo of author

By CineDesk

கடுமையான முதுகு வலி முழங்கால் வலி நீங்க இதனை தடவுங்கள்!! உடனடி தீர்வு!!

அன்றாட வாழ்வில் பல பேருக்கு உடலில் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் முழங்கால் வலி என்று பல பிரச்சினைகள் இருக்கின்றன.

முழங்கால் வலி தேய்மானம், அதிக பயன்பாடு மற்றும் காயம் ஏற்படுவதன் காரணமாக தோன்றுகிறது.

தசைப்பிடிப்பு, தசைஇருக்கம், எலும்பு முறிவு, காயம் காரணமாக முதுகு வலி ஏற்படுகிறது.

மூட்டுகளை சுற்றி ஏற்படுத்தும் எந்த காயமும் மூட்டு வலிக்கு காரணமாக இருக்க கூடும்.

இதற்கு பல மருந்துகள் இருக்கின்றன.அதில் ஒரு வகையான ஆயுர்வேத மருந்தை தயாரிக்கும் முறையைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள் கடுகு எண்ணெய் அல்லது எள் எண்ணெய், மிளகு ,திப்பிலி,சுக்கு,பூண்டு,பிரியாணி,

இலை,உளுந்து பருப்பு.

இதை செய்வதற்கு முதலில் கடுகு எண்ணெய் அல்லது எள் எண்ணெய் 50 மி.லி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் மிளகை இடித்து சேர்த்து கொள்ள வேண்டும். மிளகிற்கு கை கால்களில் வரும் வீக்கத்தை போக்கும் ஆற்றல் உள்ளது.

பிறகு இதனுடன் 5 திப்பிலியை சேர்க்க வேண்டும். திப்பிலி சேர்த்த பிறகு சுக்கு சிறிதளவு சேர்த்து கொள்ள வேண்டும். சுக்கில் அழற்சி எதிர்ப்பு குணங்கள் அதிகமாக இருப்பதால் உடம்பில் வரும் வலியை குறைக்கும் சக்தி இதற்கு இருக்கிறது.

அடுத்து 4 அல்லது 5 வெள்ள பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும் . இது மூட்டு வலி மற்றும் இடுப்பு வலிக்கு மிக சிறந்தது.

இறுதியாக பிரியாணி இலை சேர்க்க வேண்டும். பிரியாணி இலையில் வைட்டமின் பி 12 மற்றும் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கிறது.

எல்லாம் சேர்த்து சிறிது நேரம் அடுப்பை குறைவாக வைத்து வதக்க வேண்டும்.பொருட்களின் நிறம் மாறும் வரை செய்ய வேண்டும். பிறகு கடைசியாக எலும்பு வலிக்கு ஒரு முக்கியமான பொருளான உளுந்து பருப்பை சேர்த்து இறக்க வேண்டும்.

சிறிது நேரம் இதை சூடு ஆர வைத்த பிறகு வடிகட்டி எடுத்து ஒரு பாட்டிலில் சேமித்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த எண்ணெய்யை வலி இருக்கும் இடத்தில் 4 அல்லது 5 சொட்டு விட்டு நன்றாக கைகளில் பிடித்து விட்டால் வலி உடனடியாக சரி ஆக கூடும்.

வலி அதிகமாக இருக்கும் இடத்தில் கட்டை விரலால் நன்றாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அழுத்தம் குடுப்பதால் இரத்த ஓட்டம் நன்றாக செயல்படும். வலி அதிகம் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.

இந்த எண்ணெய்யை கண்ணாடி பாட்டிலில் ஒரு மாதம் வரையில் சேமித்து பயன்படுத்தலாம்.

இந்த மருந்தை இரவு தூங்குவதற்கு முன்பும், மறுநாள் காலையில் குளிப்பதற்கு முன்பும் பயன்படுத்த முதுகு வலி, மூட்டு வலி, முழங்கால் வலி என அனைத்து வலிகளும் சரி ஆகி விடும்.