கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கு ஹாப்பி தான் இந்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

Photo of author

By Parthipan K

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கு ஹாப்பி தான் இந்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

Parthipan K

Heavy rain echoes the announcement made by the District Collector! School and college holidays in these areas are happy for students!

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கு ஹாப்பி தான் இந்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம்,காரைக்கால்,புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.அதனை தொடரந்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழகத்தில் கனமழை பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

அதனை தொடர்ந்து மழையின் தாக்கம் குறைந்த நிலையில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது.அதனையடுத்து ஜனவரி 2 ஆம் தேதி தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.மேலும் அதற்கு அடுத்த வாரத்தில் அதவாது ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு  நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

அந்த விடுமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தான் பள்ளிகள் தொடரந்து செயல்பட்டு வருகின்றது.ஆனால் தற்போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதனால் கடலோர பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகின்றது.

அதன் காரணமாக நேற்று மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.இந்நிலையில் இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின் படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு முதல் வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை,அதனை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.