40 வயதுகளை தாண்டினாலே அனைவருக்கும் மூட்டு வலி, இடுப்பு வலி ஆகியவை வந்துவிடுகின்றன. கணினி முன்பு அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் இடுப்பு வலி பெண்களுக்கு அதிகமாக வந்து விடுகின்றன. இதனை சரிசெய்ய மருத்துவரிடம் சென்றால் அவர்கள் ஜவ்வு விலகி இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று பயபடுத்துவார். அப்படியே நாம் ஆபரேஷன் செய்தாலும் மறுபடியும் அந்த வலி வரத்தான் செய்யும். இப்பொழுது ஜவ்வு விலகல், எலும்பு தேய்மானம் ஆகியவற்றிற்கான இயற்கை வைத்தியத்தை பார்ப்போம்.தேவையான பொருட்கள்:1. வெற்றிலை2. திப்பிலி 53. ரோஜா மலர் ஒன்று4. பனங்கற்கண்டு 2 ஸ்பூன் 5. விளக்கெண்ணெய்6. பிரண்டை ஒரு துண்டு.7. வில்வ இலை 4.செய்முறை:1. முதலில் ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளவும்.2. அதில் சிறிதளவு விளக்கெண்ணெய் எடுத்து தேய்த்து விடவும்.3. அதை தனியே வைத்துவிட்டு ஒரு சிறிய உரலை எடுத்துக் கொள்ளவும்.4. அதில் 5 திப்பிலியை போடவும்.5. பின் ஒரு ரோஜாவை எடுத்து ரோஜா இதழ்களை போடவும்.6. வில்வ இலைகள் நான்கை போடவும். வில்வ இலை இல்லாதவர்கள் நாட்டு மருந்துக்கடையில் வில்வ இலை பொடி கால் டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.7. இரண்டு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளவும்.8. அனைத்தையும் ஒன்றாகப் போட்டு இடித்து கொள்ளவும்.9. இந்த கலவையை எண்ணெய் தேய்த்து வைத்த வெற்றிலையின் மீது வைக்கவும்.10. இப்பொழுது பிரண்டையை எடுத்து விளக்கெண்ணையை தடவி கொள்ள வேண்டும்.11. நல்லெண்ணையில் விளக்கேற்றி இந்த பிரண்டையை தீயில் காண்பித்து சுட்டு எடுக்க வேண்டும்.12. இப்பொழுது வெற்றிலையின் மேல் உள்ள கலவையில் பிரண்டையை பிழிந்தால் அதிலிருந்து தண்ணீர் வரும். அந்த தண்ணீர் 4 அல்லது 5 சொட்டு இருந்தால் கூட போதும்.13. அதை அப்படியே மடித்து சாப்பிட வேண்டும்.இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பிட்டு வர ஜவ்வு விலகல் இடுப்புவலி தீர்மானம் எதுவும் இருக்காது.ஏற்கனவே ஜவ்வு விலகியிருந்து ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருந்தால், இந்த முறையை 15 நாட்கள் செய்து வரும் பொழுது ஜவ்வு விலகல் எலும்பு தேய்மானம் ஆகியவை சரியாகும்.