காதலை ஏற்கமறுத்த 48 வயது பெண்… கொலை செய்த டாக்ஸி ஓட்டுநர்…!

0
349
#image_title

காதலை ஏற்காததால் பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் வசித்து வருபவர் தீபா. இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காராக பணியாற்றி வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசித்து வரும் அவர் இந்திரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பீமா ராவ் என்ற 27 வயது வாலிபர் அறிமுகமாகியுள்ளார்.

கேப் டிரைவரான இவரின் வண்டியில் தீபா தினமும் அலுவலகம் சென்று வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. பீமாராவ் தீபாவின் உறவினர்களிடமும் நன்றாக பழகி வந்துள்ளார். இதற்கிடையில்,தீபாவை காதலிப்பதாக பீமாராவ் தெரிவித்துள்ளார், ஆனால், இதனை தீபா ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

ஆனால், பீமாராவ் தொடர்ந்து அவரை தொல்லை செய்து வந்துள்ளார். இதனால், பீமா ராவின் அழைப்புகளையும் , குறுந்தகவல்களையும் தீபா ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி கடைக்கு செல்ல பீமாராவை அழைத்துள்ளார். காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தீபாவை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து, அவரின் சடலத்தை அங்குள்ள வாய்க்காலில் வீசி விட்டு சென்றுள்ளார். தீபாவை காணாத உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரணையில் அவர் கடைசியாக பீமாராவுடன் சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleவாகன பதிவு எண்  தயாரிக்கும் கடை உரிமையாளர்களின் கவனத்திற்கு! இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை!
Next article100 நாள் வேலை திட்டத்தில் நிதி மோசடி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!