100 நாள் வேலை திட்டத்தில் நிதி மோசடி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
192
Financial scam in 100 day job program! Action order issued by the High Court!
Financial scam in 100 day job program! Action order issued by the High Court!

100 நாள் வேலை திட்டத்தில் நிதி மோசடி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு ஆண்டும்  100 நாட்களுக்கு வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை திட்டமானது அமல்படுத்தப்பட்டது. இதற்கு கடந்த 25ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை கொடுக்கப்படும் அதற்கான ஊதியமும் வழங்கப்படுகிறது.

இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பணி ஏற்படுத்தப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் அந்த அமைச்சகத்திற்கு முதலில் ரூ.1,35,000 கோடி ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு திருத்தப்பட்ட மறு மதிப்பீட்டின்படி நிதி ஒதுக்கீடு ஒரு லட்சத்து 81 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டது. மேலும் ரூ.1,57,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு 13 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு 60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் பெயர்களை சிவகங்கை மாவட்டம் கண்டதேவி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து நிதி முறைகேடு செய்துள்ளனர். அது தொடர்பாக கண்டதேவி ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

கண்டதேவி ஊராட்சியை சேர்ந்த இரண்டாவது வார்டு உறுப்பினர் கருப்பையா இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி தலைவரின் கணவர் பெயர், தாயார், உடன் பிறந்தவர்கள் பெயர் மற்றும் வெளிநாட்டில் வாழும் நபர்கள், கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கும் நபர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது, அவர்கள் வேலை செய்ததாக பொய்யாக கணக்கு காட்டி ஊராட்சி நிதியில் மோசடி செய்துள்ளனர்.

மேலும் ஊராட்சித் தலைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் இலவச வீடுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்ற கூறிய நீதிபதி தனது கருத்தினை தெரிவித்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி 12 வாரங்களுக்குள் சட்டத்திற்கு உட்பட்டு உரிய  நடவடிக்கை எடுக்க சிவகங்கை ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.