கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்! போலீசார் தீவிர விசாரணை! 

Photo of author

By Amutha

கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்! போலீசார் தீவிர விசாரணை! 

Amutha

The body of a woman floating in the pool with her legs tied! Police serious investigation!

கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்! போலீசார் தீவிர விசாரணை! 

நெடுஞ்சாலையின் அருகே உள்ள குளத்தில் சடலம் ஒன்று மிதந்துள்ளது. உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள குளத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மிதந்ததாக அந்தப் பகுதி போலீசார் தெரிவித்தனர். ஜெய்ப்பூர்- தோல்பூர் இடையே உள்ள  நெடுஞ்சாலையின் அருகே உள்ள குளத்தில் சடலம் கிடந்ததாக பசார் டாங் காவல் நிலைய பொறுப்பாளர் மோகன் சிங் கூறினார்.

இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் முதல் கட்டமாக அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணின் அடையாளத்தை காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்  இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பெண்ணின் அடையாளம் பெயர் தெரிந்தால் தான் மேற்கொண்டு விசாரணை விசாரணையில் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.