கீழவடகரை ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை!

Photo of author

By Rupa

கீழவடகரை ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை!

Rupa

Bhumi Pooja for the building of sub-health center in Keezawatakarai Panchayat!
கீழவடகரை ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை!
தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழவடகரை ஊராட்சி அழகர்சாமிபுரத்தில் சுமார் ரூபாய் 25 லட்சம்  மதிப்பீட்டில், துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை கீழ வடகரை ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தேனி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகரன்,  உதவி செயற்பொறியாளர் பிரகதீஸ்வரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்  பவானந்தன் கலந்துக்கொண்டனர்.
மேலும் சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்தன், சுரேஷ், இ.புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜ்குமார், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேல், ஒன்றிய குழு துணைத் தலைவர் மருதையம்மாள்  சாஸ்தா, ஒன்றிய கவுன்சிலர் சரவணன், கீழ வடகரை ஊராட்சி துணைத் தலைவர் ராஜசேகர், 8வது வார்டு கனகவல்லி துரைப்பாண்டி, ஆகியோரும்  கலந்து கொண்டனர்.