குடும்பத் தலைவிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! 1000 வழங்கும் திட்டம் குறித்து நியூ அப்டேட்!!
ஸ்டாலின் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 என்ற வாக்குறுதி.
இதனையடுத்து கட்டாயம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதற்கான உரிமை தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு என்று தனி வங்கி கணக்குகளும் தொடங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கும் மட்டுமே ரூ 1000 உரிமை தொகை வழங்கப்படும். இதன் வாயிலாக தமிழகம் முழுவதும் சுமார் ஒரு கோடி குடும்ப தலைவிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரிமை தொகையை வழங்குவதற்கு இன்னும் 3 மாத காலம் உள்ளது. இதனால் குடும்ப தலைவிகள் ஒவ்வொருவரும் வங்கிக் கணக்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்குதலின் அடிப்படையில் தகுதியுடைய குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே ரூ 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. இருந்தாலும் குடும்ப தலைவிகள் அனைவரும் அஞ்சல் கணக்கு தொடங்கி வருகின்றனர்.
அஞ்சல் கணக்கு தொடங்குவது குறித்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே ரூ 1000 உரிமை தொகையை பெறுவதற்கான தகுதி உடையவர்களை பற்றி அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.