அக்குள் மற்றும் தொடை இடுப்புகளில் உள்ள கருமையை ஈஸியாக நீக்கலாம்!!

0
190
#image_title

அக்குள் மற்றும் தொடை இடுப்புகளில் உள்ள கருமையை ஈஸியாக நீக்கலாம்!!

கழுத்து பகுதியில் தொடை பகுதியில் கால் இடுக்குகளில் அக்குள் பகுதிகளில் கருமை இருக்கிறதா இனி கவலை வேண்டாம்.

இது மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நம் நிறத்திலிருந்து வேறுபட்டு அதிக கருமையுடன் காணப்படும்.

இது நீங்கள் சரியாக மெயின்டன் செய்யாமல் விடுவதாலோ இல்லை வேறு சில காரணங்களினாலோ இது ஏற்படக்கூடும்.

இது பெண்களுக்கு செயின் போடுவதனாலும் ,அதிக பருமன் எடை உடையவராக இருந்தால் கழுத்தும் பகுதியில் மடிப்பு ஏற்பட்டு இது உண்டாகக் கூடும். வேறு சிலருக்கு உடலில் சரியான அளவு ரத்தமின்மையினாலும் இது ஏற்பட நேரிடும்.

ஆண் பெண் போன்ற இருவருக்கும் இந்த கருமை காணப்படும் இதனை நாம் சுலபமான முறையில் சரி செய்து விடலாம்.

இதனை நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையான முறையில் சரி செய்துவிடலாம்.

தேவையான பொருள்:

செக்கு நல்லெண்ணெய்
மஞ்சள் தூள்
எலுமிச்சை பழம்
உப்பு
சர்க்கரை
தக்காளி பழம்
காபி பொடி

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் செக்கு நல்லெண்ணையை சேர்த்துக் கொள்ளவும்.

பின்பு நம் வீட்டில் உள்ள மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் எடுத்து அத்துடன் சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.

நன்றாக கலக்கிய நல்லெண்ணெய் மற்றும் மஞ்சத்தூளுடன் சிறிதளவு எலுமிச்சை பல சாற்றை பிழிந்து விடவும்.

இதேபோன்று வேறொரு கிண்ணத்தில் சிறிதளவு உப்பு அதனுடன் அரை தக்காளி பழத்தை நன்றாக பிழிந்து விடவும்.

இத்துடன் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சிறிதளவு காபி பொடியும் சேர்த்துக் கொள்ளவும்.

இவை அனைத்தும் சேர்ந்த கலவையை  அக்குளில் மற்றும் தொடை இடுக்குகளில் கருமை இருந்தால்  இதனை தடவி நன்றாக தேய்த்தால் போதும்.

நீங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பு இதனை நன்றாக தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்தாலே சில தினங்களுக்குப் பிறகு அந்த கருமை நிறம் குறைந்து இருப்பதை நீங்கள் காணலாம்.

author avatar
Parthipan K