குடும்ப அரசியல் செய்யும் திமுக!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!!

Photo of author

By CineDesk

குடும்ப அரசியல் செய்யும் திமுக!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!!

CineDesk

DMK doing family politics!! Upset Edappadi Palaniswami!!

குடும்ப அரசியல் செய்யும் திமுக!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!!

அதிமுக சார்பில் நேற்று ஆறு பகுதிகளில் கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் கோரணம்பட்டி என்னும் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசு மக்களிடம் கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாடகம் ஆடி வருகிறது.

தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் கர்நாடக மாநிலத்திற்கு சென்று காவிரி நீரை பெற்று தருவதாக கூறிவிட்டு,

அங்குள்ள முதல் மந்திரி மற்றும் மாநில நீர்வளத்துறை அமைச்சருடன் கைகோர்த்து, பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி உறவு கொண்டாடி வருகிறார்.

எனவே, இந்த காவிரி நதி நீர் பிரச்சனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். அதுவே, முன்பு இருந்த அதிமுக ஆட்சியில் பாஜனதாவுடன் கூட்டணி வைத்து இந்த காவிரி பிரச்சனைக்காக 22 நாட்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி உள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்தில் திமுக வின் ஊழல் பல மடங்கு அதிகரித்து வருகிறது. இவர்கள் ஊழல் செய்யும் பணத்தை பாதுகாப்பதையே முழு வேலையாக செய்து வருகிறார்கள்.

குடும்ப அரசியல் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் அதிமுக வைப் பார்த்து அடிமையாக இருக்கிறோம் என்று கூறுகிறார். ஆனால் உண்மையில் பாஜக வுடன் அதிமுக கூட்டணி வைத்து தலை நிமிர்ந்து இருக்கிறது.

ஆனால் திமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்து அடிமை வாழ்வை வாழ்ந்து வருகிறது. மேலும், ஊழல் செய்த பணத்தை பாதுகாக்க முதல்வர் ஸ்டாலினும் அவரது அமைச்சர்களும் அடிமையாக வாழ்கின்றனர்.

திமுக கட்சியில் உண்மையாக இருப்பவர்களுக்கு அங்கு மரியாதையே இல்லை. ஊழல் செய்பவர்களே தலை நிமிர்ந்து வாழ்கின்றனர். இதற்கு உதாரணம் முன்னாள் அமைச்சரின் ஆடியோ வெளியானது தான் என்று கொடி ஏற்று நிகழ்வில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பேசி உள்ளார்.