கொடநாடு விவகாரத்தை மீண்டும் விசாரிக்க பிளான் போடும் திமுக! கலக்கத்தில் அதிமுக

கொடநாடு விவகாரத்தை மீண்டும் விசாரிக்க பிளான் போடும் திமுக! கலக்கத்தில் அதிமுக

திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது அதற்கு தலையாய பணியாக இருந்து வருகிறது இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும்போது அரசியல் ரீதியான நடவடிக்கைகளும் அவ்வப்போது எடுத்து வருகின்றது. அந்தவகையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கையும் தீவிரமாக விசாரிக்க திட்டமிட்டு வருகிறது.குறிப்பாக கொடநாடு விவகாரம் குறித்தும் மீண்டும் விசாரிக்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நண்பரான சஜீவன் தோட்டத்தில் சட்டவிரோதமாக காட்டு மரங்களை வெட்டி கடத்தியது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் அதிமுகவின் மாநில வர்த்தகர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.2 கோடி மதிப்பிலான மரங்களை கடத்தியது தொடர்பான இந்த வழக்குடன் சேர்த்து கொடநாடு விவகாரத்தையும்  விசாரிப்பதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

கொடநாடு விவகாரத்தை மீண்டும் விசாரிக்க பிளான் போடும் திமுக! கலக்கத்தில் அதிமுக

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டம்,கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான்,மனோஜ் உள்ளிட்டோரால் அடையலாம் காட்டப்பட்ட முக்கிய குற்றவாளியாவார்.முன்னாள் முதல்வர் எடப்பாடியின் நெருங்கிய நண்பரான இவர் அதிமுகவின் மாநில வர்த்தகர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது இவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாய பயிராக கருதப்படும் சில்வர் ஓக் மரங்களை வெட்ட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கியுள்ளார்.ஆனால் இதைப் பயன்படுத்தி பாதுகாக்கபட்ட மரங்களான தேக்கு,ஈட்டி,சந்தனம் மற்றும் பலா உள்ளிட்ட விலையுயர்ந்த மரங்களை வெட்டியதாகவும்,அதை கேரளா மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நீலகிரி மாவட்டம் நடுவட்டம் அமைச்சராக பதவி வகித்து வந்த சிவா,உதவி வனச்சரகர் குமார், வனவர் தர்மசக்தி மற்றும் வனக்காவலர் நசீஸ்குட்டன் உள்ளிட்டோர் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்  வனத்துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது சட்டவிரோதமாக வனத்துறை அதிகாரிகளை மிரட்டி 2 கோடி ரூபாய் மதிப்பிலான விலை மதிப்புமிக்க ஈட்டி,  தேக்கு, சந்தனம் மற்றும் பாலா உட்பட 200 மரங்களை வெட்டி கடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக பாதுகாக்கப்பட்ட காட்டு மரங்களை வெட்டி கடத்திய விவகாரத்தில் சிக்கியுள்ள அதிமுகவின் முக்கிய பதவியில் உள்ள சஜீவன் விரைவில் கைது  செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இத்துடன் கேரளா மற்றும் மேட்டுப்பாளையத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடங்களில் வனத் துறை சார்பாக விரைவில் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தான் அதிமுக முக்கிய நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட கொடநாடு எஸ்டேட் விவகாரமும், அங்கு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பற்றிய விவகாரங்களும் மீண்டும் விசாரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ஏற்கனவே  கொங்கு மண்டலத்தில் இருந்து பதவி வகித்தமுக்கிய அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை  விசாரிக்க திட்டமிட்டு வரும் நிலையில்   கொடநாடு விவகாரம் அதிமுக தலைமைக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment