கோடையில் ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

Photo of author

By CineDesk

கோடையில் ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

CineDesk

ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

கோடையில் ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

கோடைக்காலம் தொடங்கியது முதல்  வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. வெயில் காலத்தில் ஏசியும், மின்விசிறியும் இன்றியமையாததாக இருக்கிறது. பகலில் சூரியனின்  வெப்பத்தாக்குதல் மிக அதிகமாக இருப்பதால், இரவிலும் அந்த வெப்பத்தின் அளவு சற்றுதான் குறைகிறது.

ஆகையால் இரவில் ஏசியும், மின்விசிறியும் இல்லாமல் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. ஏசி என்பது ஆடம்பர பொருளாக இல்லாமல் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. தற்போது ஏசி இல்லாத வீடுகள் என்பது குறைவாகும். நம்மால் இந்த வெயில் காலத்தில் ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை, அனால் மின்சார  கட்டணம்  பற்றிய கவலையும் பெரிதாகத்தான் இருக்கிறது.

இப்படி நாம் நாள் முழுவதும் ஏசி உபயோகித்தும், மின்சார  கட்டணம்  குறைவாக வருவதற்கான வழிகளை பார்க்கலாம்.

முதலில் ஏசியை ஆன் செய்வதற்கு முன் வீட்டிலுள்ள கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு ஏசியை ஆன்  செய்யுங்கள். ஜன்னல் கதவுகளை மூடாமல் ஏசியை நாம் போடும்போது வெளியில் இருக்கும் உஷ்ண காற்று உள்ளே வருவதால், ஏசி குளிர்ச்சியடைய அதிக நேரம் எடுக்கும். இது மின்சார  கட்டணம்  அதிகமாக வழி வகை செய்யும்.

ஏசி ஓடும் போது மின்விசிறியையும் சேர்த்து பயன்படுத்தும்போது, அறை சீக்கிரமாக குளிச்சியடையும். நாள் முழுவதும் ஏசியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

ஏசியை குறைந்த வெப்ப நிலையில் வைக்காதீர்கள் இது அதிக மின்சாரத்தை எடுக்கும். ஏசியை 18 டிகிரியில் வைப்பதால் சீக்கிரமாகவும், அதிக குளிர்ச்சியையும் கொடுப்பதாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால் நமது உடல் வெப்ப நிலைக்கு  24 டிகிரியே சரியானது. இதன் மூலம் 6 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும்.

நாம் கோடைக்காலம் வரும் பொழுதான் ஏசியை தேடுவோம். அதற்க்கு முன்னர் நாம் ஏசியை உபயோகித்திருக்க மாட்டோம். நீண்ட நாள் கழித்து ஏசியை போடுவதற்கு முன் ஏர் பில்டரை  ( Air Fliter), நன்கு கழுவி  உபயோகிக்க வேண்டும். அடிக்கடி ஏர் பில்டரில் உள்ள தூசிகளை கழுவி சுத்தம் செய்து உபயோகப்படுத்துவதால்  மின்சார கட்டணத்தை குறைக்கலாம்.