மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

0
149
#image_title

மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

கடலூரில் மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது.

தேவனாம்பட்டினம் மீனவர்கள் ஒன்று திரண்டு போய் சோனாங்குப்பம் மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 21 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் வழக்கு விசாரணையின் போது உயிரிழந்துவிட்டார்.

மீதமுள்ள 20 பேருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது; இதில் பத்து பேர் குற்றவாளிகள் என கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார். தண்டனை விவரங்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் எனவும் நீதிபதி தகவல்.

இதன் காரணமாக கடலூர் நீதிமன்ற வளாகம், தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மற்றும் மீன்பிடித் துறைமுகம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
Savitha